twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்முட்டி மனைவியாக ரிச்சா!

    By Staff
    |

    Richa Pallod
    எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கி என்பதைப் போல, எல்லா நடிகைகளும் கோலிவுட்டுக்கு ஓடோடி வந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழைத் தாண்டி மலையாளத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் ரிச்சா பலோட்.

    தமிழ் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரிச்சா. அவர் முதன் முதலில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஷாஜகான், ரிச்சாவுக்கு 'ரிச்'சான மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரவில்லை. இருந்தாலும் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தார் ரிச்சா.

    உனக்கும் எனக்கும் படத்தில் சூப்பர் கேரக்டரில் கலக்கியிருந்தார். ஆனாலும் கூட தொடர்ந்து தமிழில் நடிக்க அவரும் ஆர்வம் காட்டவில்லை. வாய்ப்புகளும் வரவில்லை.

    இந்த நிலையில் மலையாளத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் ரிச்சா.
    முதல் படத்திலேயே மம்முட்டியுடன் இணைகிறார் ரிச்சா. இப்படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடிக்கவிருக்கிறாராம் ரிச்சா பலோட்.

    மலையாளமாவது ரிச்சாவுக்கு மங்களகரமாக இருக்கட்டும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X