Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சேது' நாயகி அபிதாவுக்கு 25ம் தேதி கல்யாணம்
மலையாளத்தில் தேவதாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிதா. சேது படத்தின் மூலம் அவரை தமிழுக்கு கூட்டி வந்தார் பாலா. அப்படத்தில் அவருக்கு நிறைய நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து தேவதாசி படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவே, அபிதாவின் மார்க்கெட் சரிந்தது.
இருப்பினும் டிவி சீரியல்கள் அவருக்கு கை கொடுத்தன. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் அபிதா. திருமதி செல்வம், தங்கமான புருஷன் ஆகிய தொடர்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அபிதாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவரை மணக்கப் போகும் மாப்பிள்ளையின் பெயர் டி.ஜார்ஜ். கேரளாவைச் சேர்ந்தவர். கோட்டயத்தில் ஒரு கெமிக்கல் கம்பெனியில், தலைமைக் கணக்காளராக இருக்கிறார்.
இவர்களது திருமணம் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வருகிற 25ம் தேதி கோட்டயம், பசிராவில் உள்ள செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க சர்ச்சில் நடைபெறுகிறது.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிப்பாராம் அபிதா.