twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாளவிகா போய் சொர்ணாமால்யா!

    By Staff
    |

    Swarnamalya
    இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

    கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர்.

    படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார்.

    இருப்பினும், ஆடியது வரை போதும், குழந்தை முக்கியம் என்று குடும்பத்தினர் வற்புறுத்தியதால் தற்போது விலகி விட்டாராம் மாளவிகா. இதையடுத்து அந்த இடத்திற்கு வந்துள்ளார் சொர்ணமால்யா.

    மாளவிகா நடிக்கவிருந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ராஜேஷ்வர் கேட்டதும் கால்ஷீட் கொடுத்து விட்டாராம் சொர்ணமால்யா.

    இப்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகவுள்ள தெற்கத்தி பொண்ணு என்ற மெகா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் சொர்ணமால்யா என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X