பரத்தா.. தயங்கும் தமன்னா!

மோசர் பேர் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது.
இதில் பரத் ஜோடியாக தமன்னா நடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என தமன்னா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஜப் வி மெட் இந்திப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மோசர் பேர் நிறுவனம் என்னிடம் இதுகுறித்துப் பேசியதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னும் நான் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை. காரணம் நான் இன்னும் நான்கு படங்களை முடிக்க வேண்டியுள்ளது என்கிறார்.
இந்தப் படத்தை அவர் தவிர்க்கவே விரும்புவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் அல்லு அர்ஜூனாவுடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க பெரும் தொகை பேசப்பட்டிருக்கிறதாம்.
'ஜப்...'பை விட 'டப்பு' முக்கியம்ல!


Click it and Unblock the Notifications











