துடித்த ரசிகர்கள்-பிழைத்த ஜெனீலியா!

ஷாகித் கபூருக்கு ஜோடியாக ஜெனீலியா புதிய இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார். கோஷ் இயக்கும் இப்படத்தின் போட்டோ ஷூட்டை மும்பையின் பந்த்ரா பகுதியில் வைத்திருந்தனர்.
இதில் நடிப்பதற்காக ஜெனீலியா படு கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார்.
இதை அறிந்து ரசிகர்கள் திரண்டு விட்டனர். ஜெனீலியா அருகில் போக முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் அவரது கவர்ச்சி உடையால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் சிலர் தொட்டுப் பார்க்கவும் துடித்தனர்.
ரசிகர்கள் ஓவராக முண்டியடித்ததால் படக்குழுவினர் பீதி அடைந்தனர். விபரீதமாக நடப்பதைத் தடுக்கும் வகையில் போலீஸாரை வரவழைத்தனர்.
போலீஸார் வந்து லத்திகளால், ரசிகர்களை விரட்டியடித்தனர். பின்னர் படக்குழுவினரிடம், இதற்கு மேலும் இங்கு இருந்தால் நல்லதாக இருக்காது, எனவே பேக்கப் ஆகி விடுங்கள் என்று அட்வைஸ் கூறினர்.
அதுவும் சரிதான் என்று எண்ணிய படக்குழுவினர் ஜெனீலியா உள்ளிட்டோருடன் இடத்தைக் காலி செய்து விட்டுப் பறந்தனர்.


Click it and Unblock the Notifications











