நயனதாராவுக்குப் பதில் த்ரிஷா?

By Staff

Trisha
லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் இப்போது நயனதாராவுக்குப் பதில் த்ரிஷா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் ரூ.1கோடிக்கு மேல் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயனதாரா. ஆனால் அவரது இப்போதைய மார்க்கெட் மற்றும் திரை உலக நிலவரங்கள் குறித்து யோசித்த இயக்குநர் லிங்குசாமி மற்றும் தயாரிப்பாளரான அவரது அண்ணன் போஸ் ஆகியார் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் நயனதாராவோ அதெல்லாம் முடியாது கறாராகக் கூறியதோடு, ஏற்கெனவே தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கி வருவதாக புகார் கூறி, படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நயனதாராவுக்குப் பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்ட தயாரிப்பாளர், த்ரிஷாவுடன் பேச்சு நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள த்ரிஷா, இந்தப் படத்துக்காக என்னிடம் அணுகினால் தாராளமாக நான் கால்ஷீட் கொடுப்பேன். நான் ஒரு தொழில்முறை நடிகை. ஒருவர் நடிக்க மறுத்த படத்தில் இன்னொரு நடிகை நடிப்பதில் தவறில்லை, என்றார்.

ஏற்கெனவே, விஜய் நடித்த குருவியில் நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டதால் அவருக்கு பதில் த்ரிஷா நடித்தார். அதேபோல சத்யம் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் த்ரிஷா. ஆனால் பின்னர் நயனதாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X