மீண்டும் இணையும் செல்வா - திரிஷா - ஜோடி விஷால்

By Staff

Trisha
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடி போடுகிறார் விஷால்.

தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய 'ஆடவரி மாட்டலக்கு அர்த்தலே வேறுலே' படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று அவரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்த்தியது.

ஆனால் அதன் பிறகு த்ரிஷா நடித்த குருவி உள்ளிட்ட படங்கள் சறுக்கிவிட, மீண்டும் ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார் த்ரிஷா.

இப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை முடித்துவிட்ட செல்வா, அடுத்து தன் தம்பி தனுஷ்-ஆண்ட்ராவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தைத் துவக்கியுள்ளார்.

அடுத்து தான், தமிழ், தெலுங்ரகு இரண்டிலும் இயக்கும் பெரிய பட்ஜெட் படத்தின் நாயகியாக நடிக்குமாறு த்ரிஷாவை அணுகியுள்ளார். கமலின் மர்மயோகி படம் வருமா வராதா என்று தெரியாத நிலையில், இப்போது செல்வா பட வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா.

எஸ்.ரமேஷ்பாபு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஹீரோ விஷால். இதற்கு முன் இரு படங்களில் தள்ளிப் போய்விட்ட விஷால்-த்ரிஷா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X