விந்தியா, நீத்தா + கரண்!

By Staff

Vindhya and Karan
கரண் ஹீரோவாக நடித்த மலையாளப் படம் கொம்பு என்ற பெயரில் தமிழுக்கு டப் ஆகி வருகிறது. இதில் அவருக்கு விந்தியாவும், நீத்தாவும் ஜோடி போட்டுள்ளனர்.

கமல்ஹாசன் மூலம் வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகி, பலவித வேடங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்து சற்றே டயர்ட் ஆகிப் போன கரண், இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்ேபன் என்று
முடிவெடுத்து காத்திருந்தார் - நல்ல கதைக்காக.

அவரது காத்திருப்பு சற்றே நீண்டது என்றாலும், கருப்பசாமி குத்தகைதாரர் கரணுக்கு சரியான ஏற்றத்தைக் கொடுத்து ஹீரோவாகவும் நிலை நிறுத்தியது.

தொடர்ந்து தீ நகர், காத்தவராயன் என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கரண், மலையாளத்தில் முன்பு ஹீரோவாக நடித்த ஈஸ்வரா என்ற படத்தை தட்டியெடுத்து கொம்பு என பெயரிட்டு தமிழுக்குக் கொண்டு வருகின்றனர்.

இதில் கரணுக்கு ஜோடியாக இருவர். ஒருவர் ரிடையர்ட் ஆகிப் போய் விட்ட விந்தியா, இன்னொருவர் நீத்தா. கேரளாவில் இப்படம் செஞ்சுரி போட்டதாம். அதிரடிப் படமான இதில், சண்டைக்காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்குமாம். அதேசமயம் கிளாமர் சைடையும் ஸ்டிராங்காக வைத்துள்ளனர்.

இப்படம் ஒரு தாதா படம். ஆனால் 'சாதா' படமாக இருக்காது என்கிறார்கள் படத் தயாரிப்பாளர்கள்.

விந்தியா போதாது என்று நீத்தாவும் இருக்கும்போது எப்படி அது சாதாப் படமாக முடியும்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X