யானாவின் இசை ஆல்பம்!

செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார்.
தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.
இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான சேஷ்டைகளுடன் ராப் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பாடகர் ஷோர்டி அகா லிட்டில் ஃபாக்ஸ் உடன் யானாவும் சேர்ந்து பாடினார்.
இதுபற்றி யானா குப்தா கூறுகையில், நான் நன்றாக கிடார் வாசிப்பேன். நிறைய கவிதை எழுதுவேன். எனவே இந்த பாடல்களை எழுதுவதற்கு சிரமப்படவில்லை.
கடந்த சில வருடங்களாக ஜாஸ் இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தினேன். இனி அதையெல்லாம் விட்டுவிட்டு ஆங்கில பாப் இசை ஆல்பம் தயாரித்து ஐரோப்பிய மார்க்கெட்டை கலக்குவேன் என்றார்.


Click it and Unblock the Notifications











