ஏவிஎம் படத்தில் கீர்த்தி சாவ்லா ஐட்டம் டான்ஸ்!
ஏவிஎம் நிறுவனத்தின் 175 படமான 'முதல் இட'த்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் கீர்த்தி சாவ்லா.
நான் அவனில்லை, உளியின் ஓசை என நிறைய படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக இருந்த கீர்த்தி சாவ்லா திடீரென்று காணாமல் போனார்.
இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் தமிழில். ஏவி எம் தயாரிக்க, மைனா விதார்த் நடிக்கும் படம் முதல் இடம். இதில் விதார்த்துக்கு ஜோடியாக கவிதா நாயர் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சாவ்லா.
"ஒரு பாடல் என்றாலும், மீண்டும் பிஸியான நடிகையாக என்னை மாற்றும் அளவு முக்கியமான படம் இது. பெருமைக்குரிய ஏவி எம் நிறுவனத்தில் நடிப்பதே பெரிய விஷயம்தானே", என்றார் கீர்த்தி.
யோகி தேவராஜ், வீரமணிதாசன், கிஷோர், பொன்னம்பலம், அப்புக்குட்டி மற்றும் இளவரசு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.
முதல் இடம் படத்தின் படப்பிடிப்பு, தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. குமரன் இயக்கும் இந்தப் படத்தை எம் சரவணன், எம்எஸ் குகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
கோடை முடிந்ததும் வெளி வருகிறது முதல் இடம்!


Click it and Unblock the Notifications











