பைக் சவாரி... சைலன்ஸரில் காலைச் சுட்டுக் கொண்ட சந்தியா!

By Sudha

Sandhya
மலையாளப் படத்துக்காக பைக் சவாரி செய்த போது தவறி கீழே விழுந்தார் நடிகை சந்தியா. இதில் பைக் சைலன்ஸரில் காலை சுட்டுக் கொண்டார்.

காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி கொஞ்ச நாள் பரபரவென நடித்து வந்தார் சந்தியா. இப்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓரிரு தெலுங்குப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் த்ரீ கிங்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே நடந்தது. கதாநாயகன் இந்திரஜித்தும் சந்தியாவும் பைக்கில் செல்வது போன்று காட்சி எடுத்தனர். மழையால் ரோடு சகதியாக இருந்தது. அதில் வேகமாகச் சென்றபோது பைக் சிக்கியது.

சந்தியா நிலைதடுமாறி கீழே விழுந்தார். கையில் பலத்த அடிபட்டது காலில் சைலன்ஸர் சுட்டு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"நான் விழுந்த இடத்துக்குப் பக்கத்தில் பெரிய பள்ளம் இருந்தது. நிறைய தண்ணீர் வேறு. அதிர்ஷ்டவசமாக அதில் விழாமல் தப்பினேன். இப்போது காயத்துக்கு மருந்து போட்டுள்ளனர். ஓட்ட லில் ஓய்வு எடுத்து வருகிறேன். காயம் குணமான பிறகு மீண்டும் நடிக்க வந்துவிடுவேன்," என்றார் விபத்து குறித்துப் பேசிய சந்தியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X