கவர்ச்சியும்-கதையும் பிரிக்க முடியாதது-சனா கான் புது விளக்கம்

By Sudha

Sana Khan
கதையையும், கவர்ச்சியையும் இங்குதான் பிரித்துப் பார்க்கிறார்கள். மாடர்ன் டிரஸ்ஸில்தான் கவர்ச்சி காட்ட முடியும் என்றில்லை. புடவையிலும் கூட கவர்ச்சியாக வந்து போகலாம் என்கிறார் சனா கான்.

சிலம்பாட்டம் படத்தில் சிலிர்க்க வைத்தவர் சனா கான். தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். இரண்டிலும் கவர்ச்சிப் பாவையாக வந்து போயிருந்தார் சனா. ஆனால் தற்போது ஆயிரம் விளக்கு படத்தில் பாவாடை, தாவணியில் பாந்தமாக வருகிறாராம்.

தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி முத்திரையால் சனாவுக்கு சற்றே விசனமாம். பிறகென்ன, மும்பையில் எல்லாம் இப்படி கவர்ச்சி நடிகை, கேரக்டர் நடிகை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். கதையையும், கவர்ச்சியையும் அங்கு ஒன்றாகவே பார்ப்பார்கள். இங்குதான் கவர்ச்சி நடிகை என்று தனி முத்திரை குத்துகிறார்கள்.

நான் கவர்ச்சி நடிகை அல்ல. கதையுடன் கூடிய கவர்ச்சியில்தான் நான் நடித்துள்ளேன். ஆயிரம் விளக்கு படத்தைப் பார்த்தால் இது புரியும்.

கவர்ச்சிகரமான டிரஸ் மட்டும்தான் ஒரு நடிகையை கவர்ச்சியாக காட்டும் என்றில்லை. சாதாரண புடவையில் கூட கவர்ச்சியாக வர முடியும். ஏன், ஸ்ரீதேவி, ஹேமமாலினி ஆகியோர் புடவையில் கவர்ச்சியாக நடிக்கவில்லையா. எல்லாம் பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது என்று பொருமித் தள்ளி விட்டார்.

இனிமேல் சனாவை அப்படியெல்லாம் பிரிச்சுப் பாக்காதீங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X