சேலைக்கு மாறும் நடிகைகள்

பெண்களுக்கு சேலை அழகு. அதிலும் தமிழ்ப் பெண்களுக்கு சேலைதான் அழகிய அடையாளம். ஆனால் சினிமாவில் மட்டும் இதில் விதி விலக்கு. கவர்ச்சிக்குத்தான் அங்கு முதல் மரியாதை. ஆனால் அதையெல்லாம் தகர்த்து, சேலையிலும் சொக்க வைக்கலாம் என்பதை நிரூபித்தவர்கள் சிலர். அவர்களில் சினேகாவும் ஒருவர்.
சினேகாவுக்கு எந்த டிரஸ்ஸும் அழகைத் தரும் என்றாலும் சேலையில் அவர் வரும்போது அக்கம் பக்கம் இருப்பவர்கள் சற்று அரண்டுதான் போவார்கள். காரணம், சேலையில் அவரது ஸ்டைலும், கம்பீரமும் இன்னும் கூடிப் போவதுதான்.
அதிலும் அந்தோணி யார் பட ஆடியோ வெளியீட்டுக்கு படு அழகான சேலையில் ரம்யமாக வந்திருந்தார் சினேகா. வந்தவர்கள் அத்தனை பேரும் சினேகாவின் சேலை அழகை பாராட்டத் தவறவில்லை.
சினேகா பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சேலையில்தான் வருவார். அதற்காக அவர் வருத்தப்படுவதோ, வெட்கப்படுவதோ கிடையாது. அவரைப் பின்பற்றி இப்போது மேலும் பல நடிகைகளும் சேலைக்கு மாறத் தொடங்கியுள்ளனராம்.
சமீபத்தில் அடடா என்ன அழகு பட ஆடியோ விழாவின்போது நிக்கோல் அழகிய சேலையில் வந்திருந்தார். அத்தனை பேரும் நிக்கோலைப் பார்த்து அடடா, என்ன அழகு என்று ஆச்சரியப்பட்டார்கள்.
இன்னும் சில ஹீரோயின்களும் கூட இப்போது சேலைக்கு மாறத் தொடங்கியுள்ளனராம்.
ரொம்ப முக்கியம்!


Click it and Unblock the Notifications











