இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்!!

By Shankar

எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.

மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.

இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கிலும் பிரச்சினை...

இதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி!

நிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.

எனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா! தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X