கேரளாவில் பியூட்டி பார்லர் துவங்கினார் 'தாமிரபரணி' நாயகி பானு

பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு சேர்ந்துள்ளார். அவர் கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதனால் தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை.
கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் ஸ்டுடியோ ரிவைவ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கியுள்ளேன். அழகுக்கலை குறித்து படித்துள்ள என் அம்மா தான் அதை நிர்வகித்து வருகிறார்.
சினிமாவை மட்டும் நம்பி இருக்காமல் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து தான் பியூட்டி பார்லரைத் துவங்கியுள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது என்றார்.
Comments


Click it and Unblock the Notifications