பாமா விஜயம்!

மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும் தமிழுக்கு நடிகைகள் வருவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் மலையாளத்திலிருந்து இன்னொரு நடிகை தமிழுக்கு வருகிறார். அவர் பாமா.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள பாமா, எல்லாம் அவன் செயல் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார்.
மலையாளத்தில் நடித்துக் கொண்டிரு்ந்தாலும் தமிழ் பக்கமும் ஒரு கண் வைத்திருந்தாராம் பாமா. எல்லாம் அவன் செயல் படத்தின் கதையைக் கேட்டதும், இதுதான் தனக்கு சரியான பிளாட்பார்ம் என்று முடிவு செய்த பாமா, அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
கரகாட்டக்காரன் என்ற பிரமாண்டப் படத்தைக் கொடுத்த கருமாரி கந்தசாமி, ஜே.துரை ஆகியோர் மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு எல்லாம் அவன் செயல் மூலம் மீண்டும் தயாரிப்புக்குத் திரும்புகின்றனர்.
இப்படத்தின் நாயகனாக ஆர்.கே. நடிக்கிறார். இவர் வாழ்த்துக்கள், தூண்டில் ஆகிய படங்களில் நடித்தவர்.
ராகிங்கை அடிப்படையாகக் கொண்ட கதையாம் இப்படத்தின் கதை. வடிவேலு முக்கிய பாத்திரத்தில் அதகளம் செய்யவுள்ளார். மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











