பாவனாவை அழைக்கும் பாலிவுட்

இந்தியிலிருந்து தமிழுக்கும், தெலுங்குக்கும் நிறைய நடிகைகள் இறக்குமதியாகி வரும் நிலையில் சேஞ்சுக்காக தமிழிலிருந்தும் தற்போது இந்திக்கு நடிகைகள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
முதலில் ஷ்ரியா அங்கு சென்றார். அவர் நடித்த ஆவாரா பான் ஹிட் ஆகவே ஷ்ரியாவுக்கு இந்தியிலும் மார்க்கெட் சூடானது. சமீபத்தில் கஜினியின் இந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக ஆசினும் இந்திக்குப் போனார்.
இந்த நிலையில் அடுத்து பாவனாவும் பாலிவுட்டுக்கு வண்டி ஏறுகிறார். சன்னி தியோலுடன இணைந்து நடிக்கப் போகிறாராம் பாவனா.
பாவனா சமீபத்தில்தான் தமிழில் ஜெயம்கொண்டான் படத்தில் நடித்து முடித்தார். அப்படத்தின் ரிசல்ட்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் டுவென்டி 20 படத்திலும் நடித்து வருகிறார். இந்த ரோலில் முதலில் நடிப்பதாக இருந்தவர் மீராஜாஸ்மின் என்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications