மேக்ஸிம் -100 சிறந்த நடிகைகள்: தீபிகாவுக்கு முதலிடம்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, செக்ஸியான நடிகளை வரிசைப்படுத்தி இம்மாதம் பட்டியல் வெளியிட்டுள்ளது பிரபல மேக்ஸிம் இதழ்.
அந்தப் பட்டியலில் ஓம் சாந்தி ஓம் நாயகி தீபிகாவுக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தீபிகா, ஹாட், செக்ஸி போன்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவள் நான். நான் அந்த மாதிரி செக்ஸியான பெண்ணும் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு கவுரவத்தை அளித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது, என்கிறார்.
இதுகுறித்து மேக்ஸிம் இதழின் ஆசிரியர் அனுப் குட்டி கூறுகையில், சர்வதேச நடிகைகளுடன் போட்டி போடக்கூடிய அத்தனை தகுதிகளும் படைத்தவர் தீபிகா என்றார்.
மேக்சிம் - 100ல் முதலிடம் பெற்றுள்ள தீபிகாவுக்கு மிகப்பெரிய விருந்து மற்றும் பாராட்டு விழா இம்மாத இறுதியில் மும்பையில் நடக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications