டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்!

Sangavi with Gayathri Raguram and her husband
தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி முறை ஆவார்.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம் நடந்தது. தீபக் சந்திரசேகர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார்.

தடபுடலாக நடந்த இந்த கல்யாணத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் வந்து வாழ்த்தினர்.

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம். டிவி சீரியல் ஒன்றிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றப் போவதாகவும் அறிவித்தார். இதனால் அவரது திருமண வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது திரையுலகில்.

இந்த நிலையில், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார் காயத்ரி ரகுராம். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சமீப காலமாக ஏராளமான நடிகைகள் விவாகரத்தை நோக்கி போய்க் கொண்டுள்ளனர். திருமணம் செய்த வேகத்தில் பிரிவதும் திரையுலகில் சகஜமாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது காயத்ரி ரகுராமும் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X