'மாப்பிள்ளை'க்கு பொண்ணு ரெடி!

மாமா ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களின் டைட்டில்கள் பலவற்றை பதிவு செய்து வைத்து ஒவ்வொரு டைட்டிலாக யூஸ் செய்து நடித்து வருகிறார் தனுஷ்.
ஏற்கனவே படிக்காதவன் டைட்டிலில் தயாரான படம் ஹிட் ஆனது. இந்த நிலையில் அடுத்து மாப்பிள்ளை என்ற பெயரில் புதுப் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இது ஒரிஜினல் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார்.
இதில் தனுஷுக்கு ஜோடியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் வடக்கத்தி ஹன்சிகா மோத்வானியை இறுதி செய்து விட்டனராம்.
ஹன்சிகாவுக்கு 18 வயதுதான் ஆகிறது. இப்போதுதான் வாக்களிக்கும் தகுதியையே பெற்றுள்ளாராம். குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
தற்போது தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, மாப்பிள்ளை மூலம் தமிழுக்கு வருகிறார்.
இனி ஹன்சிகாவுக்கு தமிழும் பிடிக்கும்..!
Comments


Click it and Unblock the Notifications