நமீதா-ஹேப்பி பர்த்டே!

தீவுத்திடலில் உள்ள ஸ்நோவேர்ல்டு அதிசய பூங்காவில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுடன் நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
காலையில் இருந்து மாலை வரை அந்தக் குழந்தைகளுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டார். நமீதாவின் பிரியத்தில் அந்த குழந்தைகள் ஏகக்குஷியாகி விட்டனர். குழந்தைகளுக்கு இனி்பபுகள் மற்றும் பரிசுப் பொருள்களை நமீதா வழங்கினார்.
த்ரிஷா, லக்ஷ்மி ராய் என வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகைகள் வரிசையில் கோலிவுட் முன்னணி கவர்ச்சி நடிகையான நமீதாவும் இப்போது சேர்ந்துவிட்டார்.
ரஜினி, கமல் தவிர முன்னணி தமிழ் நடிகர்கள் எல்லோருடனும் ஜோடியாக நடித்துவிட்ட நமீதாவுக்கு கைவசம் 8 படங்களுக்குமேல் உள்ளன. 'இந்திரவிழா', 'பெருமாள்', 'பாண்டி' ஆகிய படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications