நயன்தாராவுக்கு வக்காலத்து வாங்குவதா? - மனித உரிமைக் கழகம் கண்டனம்

Nayantara
நடிகை நயன்தாராவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு மனித உரிமை கழக சர்வதேச அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ஆதவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய அப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், "நயன்தாரா சிறந்த நடிகை. சமீபத்தில் நயன்தாரா பற்றிய விஷயங்களை பத்திரிகையில் போட்டு அவரை கஷ்டபட வைத்து விட்டார்கள். அவரவர் சொந்த வாழ்க்கை பற்றி பத்திரிகைகள் சொல்லாமல் இருப்பது அல்லது கம்மியாக சொல்வது நல்லது.

இதனால் சென்னை வருவதையும் விழாக்களில் பங்கேற்பதையும்கூட நயன்தாரா தவிர்க்கிறார். அவரைப்பற்றி வரும் செய்திகளால் மனவேதனை அடைந்துள்ளார். அவர் சொந்த வாழ்க்கை பற்றி எழுதக்கூடாது என்றெல்லாம் என்னிடம் தெரிவித்தார்," என்றார்.

கண்டனம்!:

ரவிக்குமார் பேச்சுக்கு கண்டம் தெரிவித்து மனித உரிமை கழக சர்வதேச அமைப்பின் மூத்த வக்கீல் ஆனந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நயன்தாரா நடவடிக்கைகள் சரியா என்பதை திரையுலக குடும்பங்களின் மனைவிமார்களைக் கேட்டு கே.எஸ். ரவிக்குமார் தெரிந்து கொள்ளட்டும். பெண்களுக்காக குரல் கொடுக்கும் மனோரமாவிடமும் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

நயன்தாராவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர் நடத்தைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். திரைப்படங்களின் பெண்களை அரை குறை ஆடையுடன் ஆபாச பொருளாக சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்கிறது.

இதுபோன்ற பெண்களுக்கு எதிரான நிலைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X