டோணிக்கும், லட்சுமி ராய்க்கும்..?

சினிமா நடிகைககளைப் போலவே அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார் டோணி. இதுவரை பாலிவுட் நடிகைகளுடன்தான் அதிகம் இணைத்து பேசப்பட்டார். ஆனால் இம்முறை தென்னிந்திய நடிகையான லட்சுமிராயுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் டோணி.
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, போட்டிகளுக்காக சென்னையில் தங்கியிருந்தபோது, அவருக்கும், லட்சுமிராய்க்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாகவும், அது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெஸ்ட் வேகத்தில் ஆரம்பித்த இந்த காதல் இப்போது டுவென்டி-டுவென்டி வேகத்தில் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு டோணியும், லட்சுமி ராயும், கடற்கரையோர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமையில் இருந்ததாகவும் ஒரு கிசுகிசு சூடாக கிளம்பியுள்ளது. மேலும், லட்சுமியின் பிறந்த நாள் விருந்தில் டோணியும் பங்கேற்றார். அந்த விருந்தில் லட்சுமியின் இன்னொரு நண்பரான ஸ்ரீசாந்த்தும் உடன் இருந்தாராம்.
சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் அனைத்துக்கும், லட்சுமி ராய் தவறாமல் வருகை தந்தார். குறிப்பாக டோணி பேட்டிங் செய்தபோது உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து ரசித்தார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பும், காதலும் உருவாகியுள்ளதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் லட்சுமி ராய். எப்படி இப்படி செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. டோணி போன்ற மாபெரும் கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு கொண்டிருப்பதில் எந்தப் பாவமும் இல்லை. இது சாதாரண நட்புதான். என்னைப் போன்ற கிரிக்கெட் விசிறிகளுக்கு டோணியைப் போன்ற மாபெரும் வீரர்களின் நட்பு கிடைப்பது பெருமைக்குரிய விஷயம். அதை உடனே காதல் என்று கூறி விடுவதா.
என்னை மட்டும் குறி வைத்து ஏன்தான் இப்படி எழுதுகிறார்களோ என்று பொங்குகிறார் லட்சுமி ராய்.
லட்சுமி ராய் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது இது முதல் முறையல்ல. முதலில் ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஸ்ரீசாந்த்துடன் சேர்த்து பேசப்பட்டார். பெங்களூரில் லட்சுமி ராய் படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கு அவரை நள்ளிரவில் தேடிச் சென்றார் என்று ஸ்ரீசாந்த் குறித்து செய்திகள் வந்தன.
சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுடன் பலமாக இணைத்துப் பேசப்பட்டார் லட்சுமி ராய். இப்போது டோணியுடன் இணைத்துப் பேசப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











