சுதந்திர தினப் பேரணி... நியூஜெர்ஸியைக் கலக்கிய மல்லிகா ஷெராவத்!

தனது கவர்ச்சியால் இந்திய ரசிகர்களை கிறங்கடித்த மல்லிகா ஷெராவத், அடுத்து அமெரிக்கர்களையும் கவர்ந்துவிட்டார்.. ஆனால் கவர்ச்சியால் அல்ல. ஒரு பேரணிக்கு தலைமை வகித்ததால்.
அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் சமீபத்தில் நடந்த இந்திய சுதந்திர தினப் பேரணிக்கு தலைமை வகித்து நடந்து வந்த மல்லிகாவைக் காண ஏராளமானோர் திரண்டு விட்டனர். அமெரிக்காவில் இதுவரை நடந்த இந்திய சுதந்திர தினப் பேரணிகளிலேயே மிகப் பெரியது இதுவே என அனைவரும் கூறும் அளவு இந்தப் பேரணி பிரபலமடைந்துவிட்டது.
அமெரிக்காவில் உள்ள இந்திய வர்த்தக சங்கமும், இதர இந்திய அமெரிக்க அமைப்புகளும் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஒரு மைல் தூரத்துக்கு நீண்ட இந்த பேரணியில் 25 அலங்கார ஊர்திகள், மூன்று மார்ச்சிங் பேன்ட்ஸ், நூற்றுக்கணக்கான சீருடை அணிவகுப்பாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மல்லிகா ஷெராவத்துக்குப் பின்னே அணிவகுத்து வந்த காட்சி கொள்ளை அழகு.
இதைப் பார்க்க பல ஆயிரம் பேர் குழுமி நின்றனர். அமெரிக்காவில் இப்படியொரு பேரணி இதுவரை நடந்ததில்லை என அமெரிக்க போலீசாரே ஒப்புக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











