முத்த யுத்தத்தில் மீரா!

By Staff

Meera Jasmine with Bharath
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம்.

இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளாராம்.

நேபாளி படம்தான் மீரா படு ஓப்பனாக கிளாமர் காட்டி நடித்துள்ள முதல் படம் என்று சொல்கிறார். அந்த அளவுக்கு நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா. மேலும் பல காட்சிகளில் பரத்துக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தும் அதிரடித்திருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் துரை கூறுகையில், கிளாமர் காட்சிகளில் நடிக்க மீரா தயக்கமே காட்டவில்லை. குறிப்பாக படத்தில் நிறைய இடங்களில் முத்தக் காட்சிகள் தேவைப்பட்டது. அதற்கெல்லாம் சிறப்பாக ஒத்துழைத்தார். எந்தவித தயக்கமும் இல்லாமல், ஹீரோவுடன் நெருங்கியும் நடித்துள்ளார் என்று பாராட்டினார்.

அதேபோல மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் படத்திலும் மோகன்லாலுடன் நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா. ஒரு பாடலில் நான்கு லிப் லாக் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறதாம். எல்லாம் காட்சிக்குத் தேவைப்பட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

அந்தப் பாடலின் முதல் வரியே படு கிளாமராக இருக்கிறது. ஓ மை லவ், கிஸ் மீ, கிஸ் மீ, கிஸ் மீ என்பதுதான் அந்தப் பாடலின் முதல் வரியாம்.

இளையராஜா இசையில், விஜய் ஏசுதாஸ், ஷ்வேதா மேனன் குரல்களில் உருவாகியுள்ள இந்தப் பாடல் படு அமர்க்களமாக வந்திருக்கிறதாம். இப்பாடலில் முத்தக் காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என்று மீராவிடம் கேட்டபோது, இளையராஜாவின் மயக்கும் இசை, அழகான பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து முத்தக் காட்சியில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்து விட்டது என்கிறார் மீரா.

'அவர்' கோச்சுக்காம இருந்தா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X