நயனதாராவின் 4:1!

திரிஷாவுக்குப் போட்டியாக தெலுங்கிலும் நுழைந்து அலை பரப்பியவர் நயனதாரா. இதனால் திரிஷாவின் மார்க்கெட் சற்றே ஆட்டம் கண்டது. இந்த நிலையில் பில்லாவில் நடித்து தமிழில் புது டிரெண்டை உருவாக்கியதைத் தொடர்ந்து நயனதாராவின் முழுக் கவனமும் தமிழ் பக்கம் திரும்பி விட்டது.
அவர் நடித்த யாரடி நீ மோகினி படம் சூப்பர் ஹிட் ஆகவே சத்யம் படத்தில் முழு நீள கவர்ச்சியில் நடித்தார். ஆனால் சென்சார் போர்டுடன் அவரது கவர்ச்சிக்கு கட் போடப்பட்டு விட்டது. படமும் சந்தையில் சரிவர வரவேற்கப்படவில்லை. இதனால் அப்செட்டில் இருந்தார் நயனதாரா.
இருந்தாலும் விஜய்யுடன் வில்லு, அஜீத்துடன் ஏகன் என பிசியாகவே இருக்கிறார் நயனதாரா. இரண்டு படங்களிலும் கவர்ச்சிகரமாகவும் கலக்கியுள்ளாராம்.
இதுதவிர சூர்யாவுடன் ஒரு படம், அவரது தம்பி கார்த்தியுடன் ஒரு படம் என கை நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் நயனிடம் உள்ளது. தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.
தொடர்ந்து தமிழிலேயே முழுக் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள நயனதாரா, தெலுங்கில் அவ்வப்போது தலை காட்டுவாராம்.
'சிம்பு போபியா' போய்டுச்சா நயன்?


Click it and Unblock the Notifications











