ஆர்ட் பிலிமுக்கு மாறும் நயன் - அலெக்சாண்ட்ராவாக நடிக்கிறார்

By Staff

Alexandra
கமர்ஷியல் படங்களில் ஐட்டம் நாயகி ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி காட்டிய நயன்தாரா, அடுத்து ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்படங்களில் நடித்து தன் கலை தாகத்தைத் தணித்துக் கொள்ளப் போகிறாராம்.

பிரபல மலையாள இயக்குநர் ஷ்யாமா பிரசாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் மம்முட்டி - மீரா ஜாஸ்மின் நடித்து வெளிவந்த 'ஒரே கடல்' (மலையாளம்) திரைப்படம் உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

எலக்ட்ரா எனும் கிரேக்க நாடகத்தைத் தழுவி ஷ்யாமா பிரசாத் எடுக்கும் புதிய படத்தில்தான் இப்போது நயன்தாரா நடிக்கப் போகிறார்.

இந்த நாடகத்தில் வரும் அலெக்சாண்ட்ரா எனும் பாத்திரம் நயன்தாராவுக்கு மிகப் பிடித்துவிட்டதாம். அந்தப் பாத்திரத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

செப்டம்பருக்குப் பின் இந்தப் படத்தின் வேலைகள் துவங்கிவிடும் என்கிறார்கள்.

தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் ஆதவனைத் தவிர நயன்தாராவுக்கு வேறு படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்சாண்ட்ரா யார்?

அலெக்சாண்ட்ராவுக்கு கிரேக்க மொழியில் கேசந்த்ரா என்ற பெயரும் உண்டு. கிரேக்க மன்னன் பிரியம், டிராய் நகரத்து ராணி ஹெக்குபா ஆகியோருக்குப் பிறந்தவர்தான் அலெக்சாண்ட்ரா.

இவரது அழகால் கவரப்பட்ட அப்போல்லோ கடவுள், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் வரத்தைக் கொடுத்தார் என்பது கிரேக்க நம்பிக்கை.

இப்படி மிகப் பெரிய அரிய வரத்தைக் கொடுத்தும் கூட அலெக்சாண்ட்ரா, அப்போல்லோ கடவுள் மீது காதலோ, நம்பிக்கையோ கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அப்போல்லோ, இனிமேல் அலெக்சாண்ட்ரா கூறும் கணிப்புகளை யாரும் நம்ப மாட்டார்கள் என்று சபித்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X