ஷில்பாவின் தமிழ் ஆசை

கவர்ச்சி குலுக்கல் திலகம் சோனா நடிப்பிலிருந்து சற்றே விலகி பேஷன் நிறுவனம் ஒன்றை சென்னையில் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தை நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று திறந்து வைத்தார்.
திறப்புக்குப் பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்தார் குஷி மூடில் இருந்த ஷில்பா ஷெட்டி. மறுபடியும் தமிழ் பக்கம் வரவே மாட்டீங்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழில் நடிக்க எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் நேரம் இல்லையே.
சமீபத்தில் கூட பிரபுதேவா பேசினார். அவருடைய புதிய படத்தில் நடிக்க கேட்டார். ஆனால் பிசியாக இருப்பதால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று.
ரஜினி, விக்ரம், விஜய் என எனக்குப் பிடித்த நடிகர்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள். மறுபடியும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பார்க்கலாம் என்றார் ஷில்பா.


Click it and Unblock the Notifications











