மீண்டும் தமிழில் பூஜா காந்தி

இந்த வசனத்தை இப்போது சொல்லியிருப்பவர் கவுண்டமணியல்ல... பூஜா காந்தி. கரண் ஜோடியாக கொக்கியில் அறிமுகமான அதே சஞ்சனாதான் இப்போது பூஜா காந்தி.
கன்னடத்தில் ஓகோவென உச்சத்தில் இருந்த அவருக்கு அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய தோல்விப் படங்கள்.
இப்போது மீண்டும் தமிழில் தலைகாட்டும் ஆர்வம் அதிகரித்து விட்டதாம் அம்மணிக்கு. இதனால் பெங்களூருக்கும் சென்னைக்குமாக ட்ரிப் அடித்த வண்ணமுள்ளார் பூஜா. தனது முதல் தமிழ்ப்பட நாயகன் கரணிடமும் இதுகுறித்துப் பேசி வருகிறாராம்.
தமிழ்ப் படங்களே வேண்டாம் என்றுதானே... மீண்டும் அதே கோடம்பாக்கத்துக்கு எப்படி வருவீர்கள்?
இப்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு கன்னடத்துக்கு சென்றேன். அங்கு நான் இன்னும் நம்பர் ஒன் நடிகைதான். இப்போது தமிழில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் கூற முடியுமா... சினிமாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
நல்ல வாய்ப்புகள் வந்தால் உடனே கால்ஷீட் தரத் தயாராக இருக்கிறேன். இரண்டு தயாரிப்பாளர்களிடம் இதுகுறித்துப் பேசி வருகிறேன் என்றார் பூஜா.


Click it and Unblock the Notifications











