ரேகாவுக்கு 55 வயது

நம்பவே முடியவில்லை, ரேகாவுக்கு 55 வயது ஆவதை. காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளான ரேகா, 1970ம் ஆண்டு சவான் படோன் படம் மூலமாக இந்தித் திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 1981ல் வெளியான உம்ரோ ஜான் படம் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை வழங்கியது. அந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் ரேகா.
இயல்பான அழகுடன் கூடிய ஒரு சில நடிகைகளில் ரேகாவும் ஒருவர். இந்த 55 வயதிலும் கூட பாலிவுட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் ரேகாவுக்கும் இடம் உள்ளது அவரது அழகுக்குக் கிடைத்த சான்று.
இன்றைய இளம் நாயகிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பொலிவுடன் காணப்படும் ரேகா இன்று தனது 55வது பிறந்த நாளை அமைதியான முறையில் மும்பையில் கொண்டாடுகிறார்.
Comments


Click it and Unblock the Notifications