கைகேயி ரேவதி, சூர்ப்பணகை சுஹாசினி!

By Staff

Shobana
ரூ.3 கோடி செலவில் தான் கட்டி வரும் கலார்ப்பணா எனும் நடனப் பள்ளிக்காக புதிய நாட்டிய நாடகம் ஒன்றை நடத்துகிறார் நடிகையும் முன்னணி நடனக் கலைஞருமான ஷோபனா.

இந்த நாடகத்தின் முக்கியப் பாத்திரங்களான கைகேயி மற்றும் சூர்ப்பணகைக்கு நடிகைகள் ரேவதி, சுஹாசினி ஆகியோர் பின்னணிக் குரல் தருகின்றனர்.

இதுகுறித்து புதன்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஷோபனா கூறியதாவது:

கலார்ப்பணா என்பது வெறும் நாட்டியப் பள்ளி மாத்திரமில்லை. இது ஒரு கலாச்சார மையம். நம்மால் முடியாதது எதுவுமே இல்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு கலாச்சார அமைப்பு.

இன்றைய இசை, ஒலி வடிவம், ஊடகங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கலைவடிவத்தை ஏற்படுத்தப் போகிறோம். பாரம்பரிய நடனத்துக்கும் புதுமைக்கும் ஒரு பாலம் இந்தக் கலை வடிவம்.

இதை ஒரு தனிப் பாடத் திட்டமாக்கி, இந்தியன் பிராட்வே எனும் பெயரில் பிரபலமாக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இந்த திட்டத்தின் வெளிப்பாடுதான் மாய ராவணா எனும் புதுமையான நாட்டிய நாடகம். ஏற்கெனவே அமெரிக்காவில் பல நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்நாடகம் வரும் 18-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் மாலை 7 மணிக்கு நடக்கிறது.

இதில் கைகேயி வேடத்துக்கு ரேவதியும், சூர்ப்பணகை சுஹாசினியும் குரல் கொடுத்திருக்கிறார்கள். நஸ்ருத்தீன் ஷா மற்ரும் தபுவும்கூட இந்நாடகத்துக்கு குரல் தருகிறார்கள்.

இந்த நாட்டியத்தையும், நடனப் பள்ளியையும் என் அத்தைகள் லலிதா, பத்மினி, ராகினிக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்றார் ஷோபனா.

இதற்கான டிக்கெட்டுகள் லேண்ட்மார்க், மியூசிக் அகாடமி மற்றும் கலார்ப்பணா (044- 65341135) வில் விற்பனை செய்யப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X