நயன் மீது சனா பாய்ச்சல்!

By Staff

Sana Khan
நயனதாரா மீது அப்படி என்ன இருக்கிறது... எல்லா படத்திலும் ஒரே ஸ்டைலில் நடிக்கும் அவரை எனக்குப் பிடிக்கவில்லை. த்ரிஷாதான் வெரைட்டியாக தோற்றமளிக்கிறார் என படபடவென பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் புது நடிகை சனா கான்.

சிலமாபாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் மும்பை மாடல் அழகி சனா கான்.

தனது முதல் தமிழ் பட அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:

சிலம்பாட்டம் எனது முதல் படம். படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கிறேன். சிலம்பாட்டம் படத்தில் கிராமத்து பெண் வேடம். படம் முழுக்க பாவாடை, தாவணியில்தான் நடித்துள்ளேன்.

இப் படத்தில் நடிப்பதற்காக நிறைய தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். அப்படி பார்த்ததில் அஜீத் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகராகி விட்டார்.

இங்கே பலருக்கு நயனதாராவைத்தான் பிடிக்கிறது. எல்லா படங்களிலுமே ஒரே மாதிரியான தோற்றத்திலும் ஸ்டைலிலும்தான் அவர் நடிக்கிறார். அவரிடம் என்ன இருக்கிறது, அவருக்கு ஏன் இவ்வளவு மவுசு என புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை த்ரிஷாதான் வெரைட்டியாக நடிக்கிறார். அதனால் எனக்குப் பிடித்த நடிகை த்ரிஷாதான். இந்தியில் பிரீத்தி ஜிந்தா போல தமிழில் த்ரிஷா துடிப்பான கேரக்டர்களில் பொருந்துகிறார்.

விரைவில் தமிழ் பேச கற்றுக்கொள்வேன் என்கிறார் சனா.

சிம்புவின் இந்நாள் ஜோடிக்கு, முன்னாள் ஜோடி நயன் மீது இவ்வளவு கோபம் வருவது இயற்கைதானே!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X