ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சாமியார் - மீண்டும் சர்ச்சை

By Staff

Shilpa Shetty
மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் லிப் டு லிப் முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பேற்படுத்தினார்.

இப்போது நாக பஞ்சமி பூஜைக்காக கோயிலுக்கு வந்த ஷில்பாவை ஒரு சாமியார் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

மும்பை அருகே பொவாய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா நாக பஞ்சமி பூஜைக்காகச் சென்றார். சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியோடு கடவுளை வழிபட்டுக் கொண்டு நின்றார். ஷில்பா ஷெட்டி வந்திருப்பதை அறிந்து ஏராளமான பக்தர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

கோவிலில் பூஜைகள் செய்து வரும் சாமியார் அங்கு வந்த ஷில்பா ஷெட்டியின் முகத்தை பிடித்து திடீரென்று இழுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை இறுகப் பிடித்து திடீரென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார்.

கோவிலுக்குள் நடந்த இந்த முத்தக்காட்சி பக்தர்களை கடும் ஆத்திரமடையச் செய்தது. ஷில்பா ஷெட்டியையும் சாமியாரையும் கடுமையாக திட்டித் தீர்த்தனர். ஆனால் ஷில்பா அசரவில்லை.

"மகளுக்கு தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? அப்படித்தான் இதுவும்", என்று ஆவேசமாகக் கூறினார்.

கோவிலில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா மீது வழக்குப் போட ஏற்பாடுகள் நடக்கின்றன.

ரிச்சர்ட் கிரே முத்த விவகாரத்தின் போதும் இதேபோல சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகாரும் தரப்பட்டது ஷில்பா மீது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X