தலைவன் இருக்கின்றான்: கமல் ஜோடி ஸ்ரேயா

இதுவரை இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி என கூறப்பட்டு வந்த த்ரிஷாவுக்கு மர்மயோகியில் மட்டும் வாய்ப்பளிக்கிறார் கமல்.
தசாவதாரம் படத்துக்கு பின் மர்ம யோகி எனும் படத்தை இயக்கி நடிப்பதாக கமல் அறிவித்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் இன்றைய நிதி நெருக்கடியில் எடுப்பது சிரமம் என படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் சாமிநாதன் கூறிவிட்டதால், தற்காலிகமாக படத்தை ஒத்திப்போட்டார் கமல்.
இப்போது தலைவன் இருக்கின்றான் இருபட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்தப் படம் முடியும் முன்பே ஜனவரி அல்லது இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு மர்மயோகியையும் துவங்கும் திட்டமிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்துக்கு கதாநாயகி தேர்வு பணி கடந்த இரு வாரங்களாக நடந்தது. த்ரிஷா, ஸ்ரேயா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக ஸ்ரேயாவை தலைவன் இருக்கின்றான் பட கதாநாயகியாக கமல் தேர்வு செய்துள்ளார்.
ஆனாலும் தனது மர்மயோகிக்கு த்ரிஷாதான் நாயகி என்று உறுதி கூறியிருக்கிறாராம். மர்மயோகியில் ஸ்ரேயாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஜோடியாக இவர் நடித்த கந்தசாமி விரைவில் திரைக்கு வருகிறது.
இதைத் தவிர, ஜக்குபாய் படத்திலும் நடிக்கிறார் ஸ்ரேயா.


Click it and Unblock the Notifications











