நமீதாவை மிஞ்சுவேன்!-இது சிந்தூரி சபதம்!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சிந்தூரி. அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தார்.
தெலுங்கிலும் சில படங்களில் தலைகாட்டியவர், மீண்டும் தமிழுக்கே வந்து தன் திறமையைக் காட்ட முடிவு செய்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழில் நல்ல பாத்திரங்கள் அமையாததால் தெலுங்குக்கு போனேன். அங்கு நான் நடித்த குண்டம்மா காரி மனவாடு சூப்பர் ஹீட்டாக ஓடியது. பிறகு நல்ல படங்கள் அமையவில்லை. தமிழில் கிளாமராக நடிக்க வாய்ப்புகள் வந்தன. காத்திருந்தது போதும் என்று நடிக்க வந்து விட்டேன்.
எந்த மாதிரி வேடத்தில் நடிக்க அழைத்தாலும் நடிப்பேன். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கிடைக்கிற கேரக்டரில் நடிப்பது தான் சரியானது.
சினிமாவை பற்றி இப்போது தான் புரிந்து கொண்டேன். கிளாமராக நடிப்பது என்று வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படத்துக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு கிளாமராக நடிப்பேன். இன்றைக்கு நமீதாதான் அதிக கவர்ச்சி காட்டுகிறார். அவரையும் மிஞ்சும் வகையில் அதிக கவர்ச்சி காட்டி பின்னுக்கு தள்ளுவேன்.
உங்களுடன் பாய்ஸ் படத்தில் நடித்த மற்ற நால்வரும்ம் உச்சத்தில் இருக்கிறார்கேள?
உண்மைதான். அவர்கள் சினிமாவை நன்கு புரிந்து பிளானோடு வந்தவர்கள். அதனால் அவர்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் வெற்றியைடந்திருக்கிறார்கள். நான் இப்போது தானே சினிமாவைப் புரிந்து கொண்டேன். இனிமேல் பாருங்க, அடுத்த ஆண்டு என்னுடைய ஆண்டாக இருக்கும்.
நடிப்பு நடனம் எனக்கு தெரியும். ஒரு பாட்டுக்கும் ஆடுவேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











