விஷாலுடன் குத்தாட்டம் போடும் சோபி!
முன்பெல்லாம் கவர்ச்சிப் பாடலுக்கு ஆட்டம் போடுவதற்கென்றே தனியாக ஜெயமாலினி, அனுராதா டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் இருந்தனர். இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் இடம்பெற்ற சில்க் ஸ்மிதா, பின்னர் வேறு ரேஞ்சுக்குப் போய் நடிப்பில் அசத்தினார்.
கவர்ச்சி நடிகைகளைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு நாயகிகளே தாராளம் காட்டத் துவங்கியதும், கவர்ச்சி நடிகைகள் காணாமல் போனார்கள்.
பின்னர், ஹீரோயினே முக்கிய வேடத்திலும் கவர்ச்சி ஆட்டத்திலும் வந்தது போரடித்துவிட்டதோ என்னமோ.. குத்தாட்டத்துக்கென்று தனியாக பிரபல நாயகிகளை தனியாக ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தனர்.
இப்போது படத்தின் நாயகி ஒருவரையும், குத்தாட்டத்துக்கு அவரை விட இன்னும் பாப்புலரான ஒருவரையும் ஒப்பந்தம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. சமயத்தி்ல ஹீரோயினை விட இவர்களுக்கு சம்பளம் அதிகம்!
அந்த வகையில்சமீபத்தில் மங்காத்தா படத்துக்கு இந்தியில் பரபரப்பான நாயகியான கைனாட் அரோரா ஒரு அதிரடிப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
இப்போது, பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் கவர்ச்சியாட்டம் போட பாலிவுட்டின் துணிச்சல் நாயகி சோபி சௌத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோ விஷாலுடன் ஒரு பாடலுக்கு அவர் போடவிருக்கும் குத்தாட்டம் கோலிவுட்டின் மறக்கமுடியாத டான்ஸாக இருக்கும் என்கிறார்கள்.
இவர் ஏற்கெனவே இந்தியில் ஹெவி பேபி, டாடி கூல் போன்ற படங்களில் நடித்தவர். சோபி ஆடப்போகும் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளவர் விஜய் ஆன்டனி!


Click it and Unblock the Notifications











