சுகுணாவின் 'குடியரசு'

தமிழ் சினிமாவில் எந்தவித சுவட்டையும் ஏற்படுத்தாமல் ஏகப்பட்ட படங்களில் நடித்த ஹீரோ விக்னேஷ். இவரது நடிப்பில் உருவான ஆச்சார்யா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் விக்னேஷுக்கு அது பிரேக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் குடியரசு படத்ைத பெரிதும் எதிர்பார்க்கிறார் விக்னேஷ். 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் குடியரசு படத்தின் கதையாம்.
விக்னேஷுக்கு ஜோடியாக நடிக்கும் சுகுணா படு அழகாக இருக்கிறார். கவர்ச்சிகரமாக தெரிகிறார். கதையுடன், இவரது கவர்ச்சியும் அழகாக கைகோர்த்து செல்கிறதாம்.
படத்தில் விக்னேஷுக்கு பத்திரிக்கை நிருபர் வேடம். ஒரு நிருபர் நினைத்தால் சமுதாயத்தில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதையே படத்தின் மையக் கருத்தாக வைத்துள்ளாராம் இயக்குநர் சபீர் உசேன்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை விக்னேஷ் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். சுகுணாவும்தான்.


Click it and Unblock the Notifications











