மீண்டும் மலையாளத்துக்கு போன நயன்!

அவருக்குப் பதில் லிங்குசாமி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.
சம்பளப் பிரச்சினை காரணமாக லிங்குசாமி தயாரித்து இயக்கும் பையா படத்திலிருந்து நயனதாரா விலகினார்.
இந்தப் படத்துக்காக துக்கியிருந்த கால்ஷீட்டை ஒரு மலையாளப் படத்துக்கு கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் திலீப் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன் மூலம் 4 வருடத்துக்கு பிறகு மலையாள படத்தில் மீன்டும் நாயகியாக நயனதாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே சமீபத்தில் 'ட்வெண்டி 20' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
இரு மாதங்களுக்கு முன்பே திலீப் படத்தில் நடிக்கக் கேட்டனர். பையா படத்தில் ஒப்பந்தமாகி இருந்ததால் இந்தப் படத்தில் நடிப்பதாக இல்லை என கூறி விட்டார். இப்போது பையாவில் நடிக்காததால் அந்தக் கால்ஷீட்டை இந்த மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
இப் படத்தை சித்திக் இயக்குகிறார். லிங்குசாமியின் படப்பிடிப்பு துவங்கும் அதே நாளில் படப்பிடிப்பு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications











