நிறையக் கத்துக்கிட்டேன்-சமந்தா

By Sudha

Samantha
நடிக்க வந்து இரண்டரை வருடங்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப, எதிர்பார்ப்புக்கேற்ப நடிப்பேன் என்கிறார் பாணா காத்தாடி நாயகி சமந்தா.

இவருக்கு பாணா காத்தாடி முதல் படமல்ல. மாஸ்கோவின் காவிரிதான் உண்மையில் முதல் படம். ஆனால் அப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படவே அதற்குப் பின் ஒப்புக் கொண்ட பாணா காத்தாடியில் நடித்து முடித்தார்.

அதுமட்டுமல்ல தெலுங்கில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கிலும் சமந்தாதான் நாயகி. அதாவது தெலுங்கு ஜெஸ்ஸி. இப்போது சமந்தாவை எல்லோரும் ஜெஸ்ஸி என்றுதான் கூப்பிட்டு வருகிறார்களாம், பூரிப்பாக சொல்கிறார் சமந்தா.

கை நிறையப் படங்கள் இருக்கின்றன, நிறைய பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன், சரியாக செய்ய முயற்சிப்பேன் என்கிறார் சாந்தா படு பொறுப்புணர்ச்சியுடன்.

பாணா காத்தாடி அருமையான படம். என்னோட கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஒத்துக் கொண்டேன்.

அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. யே மாய செசவே படத்தில் ஜெஸ்ஸி கேரக்டரில் நான் நடித்தது கனவாகவே உள்ளது. ரசிகர்களுக்கு நான் செல்லமான ஜெஸ்ஸியாக மாறியுள்ளேன். அப்படி என்னை அவர்கள் கூப்பிடுவது எனக்கும் பிடித்திருக்கிறது என்றார் ஜெஸ்ஸி, அதாவது சமந்தா.

சரி எப்படி நடிகையானீர்கள் என்ற 'பாரம்பரியமான' கேள்வியை தூக்கி வைத்தபோது, எல்லோரும் போலத்தான் நானும் காலேஜ் போயிடிட்டிருந்தேன். பார்ட் டைமாக மாடலிங் செய்து வந்தேன். ஒரு சேலை விளம்பரத்தில் நான் நடித்தபோது அதை இயக்குநர் ரவிவர்மன் பார்த்து அசந்து போய், என்னை தனது மாஸ்கோவின் காவிரி படத்துக்கு நாயகியாக்கி விட்டார். இப்படித்தான் நான் நடிகையானேன் என்று பிளாஷ்பேக்கை கூறி முடித்தார்.

சமந்தா இப்போது தெலுங்கில் செம பிசி. ஜூனியர் என்டிஆருடன் பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ்பாபுவுடனும் ஜோடி போடுகிறார். தமிழிலும் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் தயங்காமல்.

சமந்தா நடித்த முதல் படம் இப்போதுதான் வெளியாகியிருந்தாலும் அவர் நடிக்க வந்து இரண்டரை வருடங்களாகி விட்டதாம். இந்த காலகட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டு விட்டாராம். பிறகென்ன பிரமாதமாக நடிக்கலாமே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X