ஹன்சிகா 'தமிழ்' வானி!
படு வேகமாக தமிழ் கற்று வருகிறாராம் தமிழ் சினிமாவின் புதிய கவர்ச்சிப் புயல் ஹன்சிகா மோத்வானி.
தமிழ் சினிமாவுக்கு புயலென வந்துள்ள புதிய கவர்ச்சி நாயகி ஹன்சிகா மோத்வானி. இவரது வருகையால் பல முன்னணி நடிகைகள் ஆடிப் போயுள்ளனர். மோத்வானிப் புயலில் நாமெல்லாம் என்னாவோமோ என்ற பீதிதான் அது.
முன்னணி நாயகிகளின் கண்களில் தெரியும் அந்த பீதியை உள்ளூர ரசித்தபடி தனது வேகத்தை கூட்டியுள்ளார் ஹன்சிகா. இப்போது யாரும் எதிர்பாராத வகையில் படு வேகமாக தமிழ் கற்க ஆரம்பித்துள்ளாராம் ஹன்சிகா. வெறும் புத்தகத்தை வைத்து 24 நாட்களில் தமிழ் கற்க முடியாது என்பதால், ஒரு ஆளையே போட்டு தினசரி தமிழை தீவிரமாக கற்று வருகிறாராம்.
மரியாதையாகப் பேசுவது எப்படி, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், சரியான உச்சரிப்பு என சகலத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா. என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று நினைத்து இதுகுறித்துக் கேட்டால், தமன்னா போன்றோரெல்லாம் தமிழை கற்க ஆரம்பித்த பின்னர்தான் 'ஷைன்' பண்ண ஆரம்பித்தனர். எனவேதான் நானும் தமிழ் கற்கிறேன். அதை விட தமிழ் தெரிந்தால் வசனத்திற்கேற்ற உணர்வுகளை, சரியாக காட்டலாமே அதனால்தான் என்கிறார்.
'தரோ'வாக கற்க ஆரம்பித்துள்ள ஹன்சிகா விரைவில் 'ஆகாசவானி சரோஜ் நாராயண்சாமி'க்கு நிகராக தமிழ் பேசுவார் என்று நம்புவோம்!


Click it and Unblock the Notifications











