தமிழ் இயக்குநர்கள் 'வேஸ்ட்' - பத்மப்ரியா

காணாக் கண்மனி என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் பத்மப்ரியா. இந்தப் படம் குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது படத்தைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் தமிழ்த் திரையுலகினரின் திறமைகள் குறித்துப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
பத்மப்ரியாவின் பொன்மொழிகள்...
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதுதான் படத்தில் இடம் பெறுகிறது. அதுதான் திரைப்படமாக வருகிறது.
நடிகர் நடிகைகளுக்கு தமிழில் முக்கியத்துவமே இல்லை. ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை. நடிகர், நடிகைகளுக்கு இங்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களின் ஈடுபாடும் படங்களில் அதிகம் உண்டு.
தமிழ்த் திரையுலக இயக்குநர்களுக்கு நடிகைளை கையாளவே தெரியவில்லை. அவர்களுக்குத் திறமை போதாது. மலையாள நடிகர், நடிகைகளை வைத்துப் படம் எடுக்கும் அளவுக்கு தமிழ் இயக்குநர்கள் திறமையில்லாதவர்கள்.
இதனால்தான் தமிழ்த் திரையுலகில் மலையாள நடிகர், நடிகைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குமுறியுள்ளார் பத்மப்ரியா.
பத்மப்ரியாவை 'வளர்த்த' சேரன் போன்ற இயக்குநர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்..?


Click it and Unblock the Notifications











