துணை நடிகரை மணக்கும் மகேஸ்வரி!

இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் இவர்.
கருத்தம்மாவைத் தொடர்ந்து உல்லாசம், ரெட்டை ஜடை வயசு என பல படங்களில் நடித்தார். சின்னத்திரையிலும் சில தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.
இந் நிலையில் அவருக்கும், துணை நடிகரான ஜெய் கிருஷ்ணாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரும் 18ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறுகிறது.
16ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கன்னிமரா ஹோட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படம் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பேன் என்று மகேஸ்வரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











