twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணை நடிகரை மணக்கும் மகேஸ்வரி!

    By Staff
    |

    Maheshwari
    கருத்தம்மா புகழ் நடிகை மகேஸ்வரிக்கும், துணை நடிகர் ஜெய் கிருஷ்ணாவுக்கும் வரும் 18-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் இவர்.

    கருத்தம்மாவைத் தொடர்ந்து உல்லாசம், ரெட்டை ஜடை வயசு என பல படங்களில் நடித்தார். சின்னத்திரையிலும் சில தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

    இந் நிலையில் அவருக்கும், துணை நடிகரான ஜெய் கிருஷ்ணாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரும் 18ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறுகிறது.

    16ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கன்னிமரா ஹோட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படம் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பேன் என்று மகேஸ்வரி கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X