மிலி சைரஸ், லேடி காகா, வித்யாபாலன்.... 2013ல் மிக மோசமாக ஆடை அணிந்த பிரபலங்கள்

லண்டன்: 2013ம் ஆண்டு முடிய இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடந்த முக்கிய திரை நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது எம் டிவி.

அதில் இந்தாண்டு மிக மோசமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள் என சிலர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பத்து பேர் தரவரிசை படுத்தப் பட்டுள்ளனர்.

அவர்கள் யார் யாரென தெரிந்து கொள்ளலாமா...

மிலி சைரஸ் :

மிலி சைரஸ் :

பாப் பாடகி மிலி சைரஸ் முதலிடத்தில் உள்ளார். கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள் மூலம் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருந்த சைரஸ் உடை அணியும் விஷயத்தில் படு மோசம் என சலித்துக் கொள்கிறார்களாம் அவரது ரசிகர்கள்.

நிக்கி மினோஜ் :

நிக்கி மினோஜ் :

ராப் பாடகியும், நடிகையுமான நிக்கி மினோஜ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஜமாய்க்கா அழகி பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலேயே உடை அணிகிறார். அதுவும் பார்ப்பதற்கு கண்றாவியாக உள்ளது எனத் திட்டுகிறார்கள்.

கிம் கதர்ஷியான் :

கிம் கதர்ஷியான் :

அமெரிக்க டிவி நடிகை, ஃபேஷன் டிசைனர் மற்றும் தொழிலதிபர் என பன்முகங்களைக் கொண்டவர் கிம் கதர்ஷியானுக்கு மூன்றாவது இடம். குழந்தை பிறந்த பிறகும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் காட்டிய கிம்,உடை விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்.

ஜெனிஃபர் லோபஸ் :

ஜெனிஃபர் லோபஸ் :

பாப் பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸுக்கு 4 வது இடம் கிடைத்துள்ளது. தற்போது 44வயதாகும் ஜெனிஃபருக்கு இன்னும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. எப்போதும் புதிய பேஷன்களை அறிமுகப் படுத்தும் அம்மணி, இந்த ஆண்டு சுணக்கம் காட்டியுள்ளாராம்.

பிபாஷாபாசு :

பிபாஷாபாசு :

அறிமுகமான படத்திலிருந்தே ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறிய பிபாஷாவுக்கு 5வது இடம். ஆனால், சமீபகாலமாக ரசிகர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு மோசமான உடை அணிந்து பொது இடங்களுக்கு வருகிறாரான் பிபாஷா.

முக்தா கோட்சே :

முக்தா கோட்சே :

பாலிவுட் நடிகையான முக்தா கோட்சே, இந்தாண்டு மோசமாக உடை அணிந்தவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இவர் நடித்த முதல் படத்தின் பெயர் தான் ‘ஃபேஷன்' ஆனால், மேடம் மொக்கையாகத் தான் உடையணிகிறாராம்.

லேடி காகா :

லேடி காகா :

அமெரிக்க பாப் பாடகியான லேடி காகாவுக்கு இந்தப் பட்டியலில் 7வது இடம். 2011ல் டிரண்ட்டில் இருந்த உடைகளையே இவர் தற்போதும் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வந்து ரசிகர்களைக் கடுப்பேத்துகிறாராம்.

ரிஹானா :

ரிஹானா :

8 வது இடத்தில் இருக்கிறார் அமெரிக்கப் பாப் பாடகியான ரிஹானா. சர்ச்சைகளில் சிக்கும் இவரது செயல்கள் தான் பரபரப்பைக் கூட்டுகிறதே, தவிர உடை விஷயத்தில் அவ்வளவாக அக்கறைக் காட்டுவதில்லையாம் இவர்.

கரினா கபூர் :

கரினா கபூர் :

பிரபல ஹிந்தி நடிகையான கரினா கபூர், கடந்தாண்டு மேக்கப் இல்லாத தனது படத்தின் மூலமாக ரசிகர்களை அச்சுறுத்தியது போலவே, ஆடை விஷயத்திலும் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டதால் இந்த பட்டியலில் இவருக்கு 9வது இடம்.

வித்யாபாலன் :

வித்யாபாலன் :

நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வித்யா பாலன், திருமணத்திற்குப் பிறகு சற்று பூசினால் போல் ஆகிவிட்டார். இதனால் இவரது உடைகள் இவருக்கு அவ்வளவாக எடுபடவில்லை. இந்தாண்டு மோசமாக உடை அணிந்தவர்கள் பட்டியலில் இவருக்கு கடைசி இடம் தான் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X