10 ஆண்டுகள் கழித்து வாடிப்போன த்ரிஷா, வனப்பா இருக்கும் நயன்தாரா
சென்னை: நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்.
த்ரிஷாவும் சரி, நயன்தாராவும் சரி நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜோடி படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து சென்றார் த்ரிஷா. அதன் பிறகு தான் அவர் ஹீரோயின் ஆனார்.
முதல் 3 படங்கள் ஓடாததால் திரையுலகை விட்டு சென்றுவிடாலாமா என்று நினைத்தவரை சாமி படத்தின் வெற்றி தான் பிடித்து இழுத்து வைத்தது.
நயன்தாரா ஹரியின் ஐயா படம் மூலம் கோலிவுட் வந்தார். முன்னதாக அவர் மலையாளத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் 10 ஆண்டுகளாக இருக்கும் அவர்களுக்குள் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.

த்ரிஷா
த்ரிஷா என்றென்றும் புன்னகை படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். பூலோகம் படம் முடியப் போகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

நயன்
நயன்தாரா அஜீத்துடன் நடித்துள்ள ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது. ஆர்யாவுடன் ராஜா ராணி படத்தில் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. தமிழ் இயக்குனர்களும் நயன்தாராவை தேடிச் செல்கின்றனர். மேலும் விளம்பர பட வாய்ப்புகள் வேறு வந்து குவிகிறது.

பிரேக் விட்டும்
நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்ய நினைத்து திரையுலகிற்கு குட்பை சொன்னார். பின்னர் காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அவர் பிரேக் விட்டு நடிக்க வந்தாலும் வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

த்ரிஷா
த்ரிஷாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை. அதனால் அவர் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்படுகிறது.

வதந்தி
நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று பேச்சாகக் கிடந்தது. தற்போது ஆர்யாவின் பெயர் உயரமான நடிகையுடன் சேர்த்து வருகிறது.

10 ஆண்டுகள்
பத்து ஆண்டுகளை கடந்தாலும் நயன்தாராவுக்கு மவுசு குறையவே இல்லை. த்ரிஷா தான் பாவம் வாய்ப்புகள் இன்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











