ஜவுளிக்கடை திறப்பு விழாவில் 180 பட நாயகி நித்யா மேனனிடம் வாலிபர் சில்மிஷம்
பாலக்காடு: ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த 180 பட நாயகி நடிகை நித்யா மேனனிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சமீபத்தில் தமிழில் வெளியான படம் 180 . இந்த படத்தில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் பாலக்காடு அருகே ஓட்டுப்பாறையில் ஜவுளிக்கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக சென்றார். குறித்த நேரத்தில் நடிகை நித்யா மேனன் காரில் வந்து இறங்கினார். அப்போது, நடிகை நித்யா மேனனை காண ஜவுளிக்கடை முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
அவரை பார்ப்பதற்காக பலர் முண்டியடித்து சென்ற போது, ரசிகர் ஒருவர் நித்யா மேனனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நித்யா மேனன் அந்த வாலிபரை திட்டி விட்டு கடைக்குள் சென்றுவிட்டார்.
தகவல் அறிந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். பிடிபட்ட வாலிபரின் ஊர் மற்றும் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











