2வது குழந்தையும் பெண்ணாகவே பிறக்க கஜோல் விருப்பம்

By Chakra

Kajol
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கஜோல் அதுவும் பெண்ணாகவே இருக்க வேண்டும் என ஆசை வெளியிட்டுள்ளார்.

நடிகை கஜோல், அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஏற்கனவே ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது 2வது முறையா கர்ப்பம் தரித்துள்ளார் கஜோல். 2வது குழந்தைக்காக ஆவலுடன் தேவ்கன், கஜோல் குடும்பத்தினர் காத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மனக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் கஜோல். எனக்கு மீண்டும் ஒரு பெண்ணே பிறக்க ஆசைப்படுகிறேன். மகன்தான் வேண்டும் என நான் வேண்டவே இல்லை.

நானும், எனது தங்கை தனிஷாவும் வீட்டை நிறைத்து வைத்திருந்தோம். எங்களைப் பார்த்தால் நிறைவாக இருக்கிறது என்று பெற்றோர் கூறுவார்கள். அதேபோல எனக்கும் இரண்டு மகள்களாக இருந்தால் மிகவும் சவுகரியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும்.

எனவே எனக்குப் பெண்தான் மீண்டும் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கஜோல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X