மலையாளத்தை உச்சரிக்க முடியாததால் வாய்ப்பிழந்த நடிகை பூனம்

நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தவர் பூனம் கெளர். இப்போது மலையாளத்தில் திரில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக கேரளாவுக்கு ஷூட்டிங் போனவருக்கு வசனத்தை உச்சரிக்க பெரும் சிரமமாக இருந்துள்ளது.
படத்தின் ஹீரோவான பிருத்விராஜும், இயக்குநரும் உட்கார்ந்து வசனத்தைக் கூறி உச்சரிப்புப் பயிற்சி கொடுத்துள்ளனர். ஆனாலம் பூனம் வாயிலிருந்து மலையாளம் சுத்தமாக வரவில்லையாம். சொல்லி சொல்லி சோர்ந்து போன ஹீரோவும், இயக்குநரும் கூடிப் பேசி தயாரிப்பாளரிடம் போய் பூனத்தால் பலன் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து பூனம் நீக்கப்பட்டு விட்டாராம்.
இப்போது கன்னடத்திலிருந்து கேத்தரின் தெரசா என்பவரைக் கூட்டி வந்துள்ளனர். இவருக்கு மலையாள உச்சரிப்பு நன்றாக வருகிறதாம். மகிழ்ச்சியோடு அவரை நடிக்க வைத்துள்ளனராம்.
கைக்கு வந்த வாய்ப்பு இப்படி வாயால் பறிபோனதை எண்ணி பூனம் சோகத்தில் இருக்கிறாராம்.
இவங்களுக்கு மட்டும் மலையாளத்தை சுத்தமாக பேச வேண்டும். ஆனால் இவங்க மட்டும் மற்ற மொழிகளை அரைகுறையாக பேசி கொல்வார்கள். என்னவோ போங்க சேட்டா...!


Click it and Unblock the Notifications











