தன்ஷிகா நடிப்பதாக இருந்த படத்தை அதிரடியாக தட்டிப் பறித்துள்ளார் ஷீலா.

இதையடுத்து கிளாமருக்கு எப்போதுமே கட் அவுட் வைக்கும் தெலுங்குக்கு இடம் மாறினார். அங்கு ஷீலாவுக்கு நல்ல மார்க்கெட் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து கவர்ச்சிகரமாக தெலுங்கில் கல்லா கட்டி வருகிறார்.
முன்னணி நடிகைகளுக்குப் போட்டியாக இவரும் கிளாமரில் புகுந்து விளையாடவே, முன்னணி நாயகிகளுக்கு முயற்சித்து தோல்வி அடைபவர்கள் ஷீலாவிடம் சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரிய புளியம் கொம்பாக பிடித்துள்ளார் ஷீலா. நாகார்ஜூனா ஹீரோவாக நடிக்கும் தாசரி நாராயணராவ் படத்தில் தன்ஷிகாவை ஜோடியாக்க பேசி வந்தனர். ஆனால் உடனடியாக கால்ஷீட்டை ஒதுக்க முடியாத நிலை தன்ஷிகாவுக்கு. பரிசீலனை செய்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார் தன்ஷிகா.
இந்த நிலையில் தற்போது அந்தப் படத்தில் ஷீலா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தன்ஷிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்குள் எப்படி இவர் புகுந்தார் என்பது யாருக்குமே தெரியவில்லை.
ஆனால் ஷீலாவே போய் நேரடியாக தாசரியைப் பார்த்து நானே நடிக்கிறேன் என்று நைச்சியமாக பேசி வாய்ப்பை தட்டி விட்டதாக கூறுகிறார்கள். படத்தில் ஷீலாவுக்கு படு கவர்ச்சிகரமான ரோலாம். எப்படியாப்பட்ட கவர்ச்சிக்கும் நான் ரெடி என்று ஒத்துக் கொண்டு வந்துள்ளாராம் ஷீலா. மேலும் எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமோ அத்தனை நாட்களையும் தாராளமாக எடுத்து்க கொள்ளுங்கள் என்றும் பெருந்தன்மையாக கூறி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











