ஷ்ரியாவுக்கு 28 வயசு!

டேராடூனில் பிறந்தவர் ஷ்ரியா. இருப்பினும் பள்ளிப் படிப்பெல்லாம் ஹரித்வாரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில்தானாம். பின்னர் மேல் படிப்புக்காக டெல்லிக்கு இடம் பெயர்ந்தார் ஷ்ரியா.
கதக் நடனத்தில் எக்ஸ்பர்ட் ஷ்ரியா. பின்னர் கதக்களியும் கற்றுக் கொண்டார். இரண்டு நடனத்தையும் திறம்பட ஆடக் கூடியவர்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கேமரா முன் முதல் முறையாக தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய டான்ஸ் டீச்சர் பரிந்துரையின்பேரில், ரீனு நாதன் உருவாக்கிய திரக்தி கியோன் ஹவா என்ற இசை ஆல்பத்தில் தோன்றினாராம் ஷ்ரியா.
இந்த வீடியோவைப் பார்த்துதான் ராமோஜி பிலிம்ஸ் தயாரித்த இஷ்டம் பட வாய்ப்பு ஷ்ரியாவுக்குக் கிடைத்ததாம். அப்படியே நடிகையாகி விட்டார். அந்தப் படம் வெளியாவற்கு முன்பே சந்தோஷம், சென்னகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வே, தாகூர் ஆகிய படங்கள் குவிந்து விட்டன.
இதன் பின்னர் பல தெலுங்குப் படங்களில் நடித்த ஷ்ரியா, மழை படத்தின் மூலம் தமிழுக்கும் வந்தார். தமிழில் அவர் ரஜினியுடன் நடித்த சிவாஜி அவரை ஸ்டார் நடிகையாக உயர்த்தியது.
தெலுங்கு, தமிழ் என நடித்து வரும் ஷ்ரியா தற்போது ஆங்கிலத்திற்கும் நுழைந்து ஹாலிவுட்டிலும் தனது வெற்றி மற்றும் கவர்ச்சியைக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.
வாழ்த்துவோம்...!


Click it and Unblock the Notifications











